அரசு விடுதிகளில் கலெக்டர் ஆய்வு
Perambalur King 24x7 |13 Aug 2024 4:03 PM GMT
அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பணிபுரியும் மகளிர்களுக்கான “தோழி“ விடுதியை பார்வையிட்ட கலெக்டர் அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர், பெரம்பலூர் அரசு இசைப்பள்ளி அருகே 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில், பழுதடைந்த பகுதிகளை ஆட்சியர் பார்வையிட்டு, விடுதியை இடிப்பது, புதிய விடுதி கட்டுவது, அதற்கான திட்ட மதிப்பீடுகளை தயார் செய்வது பணிகளை தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து மேற்கொள்ள அறிவுறுத்தினார். தொடர்ந்து அம்மாபாளையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் இல்லத்தினை பார்வையிட்டு, க பல்வேறு சேவைகளை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், அம்மாபாளையத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவியர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்து, மாணவியர்களுக்கு தயார் செய்யப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, அம்மாபாளையத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அம்மாபாளையத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பள்ளி மாணவர் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Next Story