அகத்தியர் கலைக்கூட மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி

அகத்தியர் கலைக்கூட மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில்  வெற்றி
சங்ககிரி:அகத்தியர் கலைக்கூட மாணவ மாணவிகள் சிலம்பம் போட்டியில் வெற்றி
தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம், சங்ககிரி ஆர்.எஸ்., அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூட மாணவ, மாணவிகள் வெற்றி பெற்றனர். தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கம் சார்பில் மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் சங்ககிரி ஆர்.எஸ்., அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூட மாணவ, மாணவிகள் 6 முதல் 10 வயதுக்குள்பட்டவர்களுக்கும், 11முதல் 15 வயதுக்குள்பட்டவர்களுக்கும் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் முதலாவது, 2 மற்றும் 3வது இடங்களில் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு சிலம்ப விளையாட்டு சங்கத்தின் செயலாளர் எம்.ஞானசேகர், நிர்வாகிகள் நல்லமுத்து, எம்.துரைசாமி ஆகியோர் சான்றிதழ்கள், கோப்பைகளை வழங்கினர். அகத்தியர் சிலம்பம் தற்காப்பு கலைக்கூட தலைமை பயிற்சியாளர் சுரேஷ், பயிற்சியாளர்கள் கவினேஷ், தங்கராசு உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story