தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு சுற்றுலா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
வரவேற்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து தமிழ்நாடு சுற்றுலா விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சுற்றுலா நிறுவனங்களுக்கு 17 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகளை செப்., 27ம் தேதி வழங்குகிறது. அதன்படி, வெளிநாட்டினருக்கான சுற்றுலா ஆபரேட்டர், உள்நாட்டு சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த பயண பங்குதாரர், சிறந்த விமான பங்குதாரர், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி, சிறந்த முக்கிய சுற்றுலா ஆபரேட்டர், சிறந்த சாகச சுற்றுலா மற்றும் முகாம்தள ஆபரேட்டர், சிறந்த கூட்டங்கள், மாநாடு மற்றும் கண்காட்சி அமைப்பாளர், சிறந்த சமூக ஊடக செல்வாக்கு செலுத்துபவர், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டின் சிறந்த விளம்பரம், சிறந்த சுற்றுலா கையேடு, சிறந்த சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் கல்வி நிறுவனம் என 17 வகை விருதுகள் வழங்கப்படுகிறது. எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து சுற்றுலாத்தொழில் முனைவோரும், இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்., 27ம் தேதி, சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னர் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை www.tntourismawards.com இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து ஆக., 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story