பக்தர்களிடம் கட்டாய வசூல் புகாரில் பூசாரி கைது

பக்தர்களிடம் கட்டாய வசூல் புகாரில் பூசாரி கைது
திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரர் மலைக்கோயி லுக்கு படிகள் வழியாகச் செல்லும் பாதையில் நாகர் பள்ளம் உள்ளது. அங்குள்ள நாகர்கோயி லில் திருமண தோஷம் போன்ற பல்வேறு தோஷங் கள் நீங்கவும், கால்நடை களை விஷப்பூச்சிகள் தீண்டாமல் இருக்கவும் பக்தர்கள் சிறப்பு பூஜை நாகருக்கு சிவப்பு மற்றும் பூக்கள் தூவி தரிசனம் செய் வார்கள். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மாதேஸ்வரன்(33) என்ப வர் தான் பூசாரி என்று கூறிவழிபாடு செய்ய வரும் பக்தர்களிடம் ₹300 வரை கட்டாய வசூலில் ஈடுபட் டுள்ளார். இதுகுறித்து திருச்செங்கோடு நகர காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட் டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஸ்வரனை கைது செய்தனர். தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத் தப்பட்ட அவரை நீதிபதி சுரேஷ்பாபு 15 நாள் காவ லில் வைக்க உத்தரவிட் டார். அதன்படி அவர் திருச்செங்கோடு கிளைச் சிறையில் அடைக்கப்பட் டார்.
Next Story