பூலாம்பட்டி காவேரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்

பூலாம்பட்டி காவேரி ஆற்றில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து 45 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டியில் நேற்று முதல் மீண்டும் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
கர்நாடகா மற்றும் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி அருகே பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை கதவணை பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பூலாம்பட்டி நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி உத்தரவின் பேரில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.இதனால் பூலாம்பட்டியில் இருந்து நெருஞ்சி பேட்டிக்கு செல்ல வேண்டிய மாணவ மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவிரியில் மீண்டும் வினாடிக்கு 45 ஆயிரம் கன அடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால், எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கம்,எடப்பாடி காவல்துறை ஆய்வாளர் பேபி, செயல் அலுவலர் ஜீவானந்தம், ஆகியோர் மேற்பார்வையில் பூலாம்பட்டி பேரூராட்சி பணியாளர்கள்/ வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Next Story