அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மாதிரி செய்திகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை

அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மாதிரி செய்திகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மாதிரி செய்திகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை
அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக மாதிரி செய்திகள் என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு, பெரியார் பல்கலைக்கழகம் IEDP HUB,IIC குழு மற்றும் வணிகவியல் துறையும் இணைந்து "வணிக மாதிரி செய்திகள்" என்னும் தலைப்பில் பயிற்சி பட்டறை நடைபெற்றது. பயிற்சி பட்டறையில் வணிகவியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி சே.ஹர்ஷவர்த்தினி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். பயிற்சி பட்டறையில் அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர். சீனி. திருமால்முருகன் அவர்கள் வணிகத்தில் ஒவ்வொருவரும் புதுவித மாதிரிகளை பயன்படுத்தினால் தன்னுடைய தொழிலில் முன்னேற்றம் அடையலாம் என்று பல்வேறு வகையான விளக்கங்களுடன் எடுத்துக் கூறி தலைமை உரையாற்றினார். இந்நிகழ்வின் அடுத்ததாக அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் ஐஐசி தலைவர் முனைவர் ஷோபா திருமால்முருகன் அவர்கள் மாணவச் செல்வங்களாகிய நீங்கள் வணிகத்தில் ஒரு புதிய தொழிலை தொடங்கும் போது மக்கள் அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் மாதிரி வடிவங்களை உருவாக்கி விளம்பரப்படுத்த வேண்டும். இந்தவகையுக்தியை கையாண்டால் தொழிலில் முன்னேறலாம் என்று எடுத்துரைத்து முன்னிலை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் திருச்செங்கோடு மகேந்திரா தொழில்நுட்பக் கல்லூரி, எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியர் ப.நவராஜா அவர்களை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர். மா.அன்புச்செல்வி அவர்கள் அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் அவர்கள் வணிக மாதிரி பற்றிய செய்திகள் என்னும் தலைப்பில் மாணவிகளுக்கு விளக்கமாக மின்பதிவின் மூலம் எடுத்துரைத்தார். புதியதாக ஒருவர் வணிகத்தில் ஒரு புதிய தொழிலை தொடங்கும் போது அத்தொழிலில் இன்றைய வளர்ச்சிக் குறித்த கருத்தாக்கங்களை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். வணிக மாதிரியில் 9வகையான கட்டுமானத் தொகுதிகள் உள்ளன. பங்குதாரர்கள், செயல்பாடுகள், உறவுகள், விளம்பரப் பிரிவு இவை வணிகத்தில் சிறப்பிடம் பெறுவதால் வணிகத்தை மேற்கொள்பவராகிய நீங்கள் இவற்றைப் பற்றிய செய்திகளை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். வணிகத்தில் இலாபம், நஷ்டம் வரும்போது நிதானத்தோடு செயல்படுவதோடு புதிய வகை புதிய வகை மாதிரிகளை மக்கள் முன் அறிமுகம் செய்து வணிகத்தை மேம்பாடு அடையச் செய்தல் வேண்டும் என்று எடுத்துக்கூறி சிறப்பு உரையாற்றினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் மா.அன்புச்செல்வி மற்றும் பேராசிரியர்கள் நிகழ்ச்சி நடக்க உறுதுணை புரிந்தனர். நிகழ்ச்சியின் இறுதியாக வணிகவியல் துறையைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவி வி. ஸ்ரீகாயத்ரி அவர்கள் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பிறதுறை உதவிப்பேராசிரியர்கள் EDC மற்றும் IIC மாணவிகள் பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story