இன்றைய வாசகர் நாளைய தலைவர் நூலகர் தின விழாவில் பேச்சு
Tiruchengode King 24x7 |14 Aug 2024 5:11 AM GMT
இன்றைய வாசகர் நாளைய தலைவர் நூலகர் தின விழாவில் பேச்சு
அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய நூலகர் தின விழாவை முன்னிட்டு Today's Reader Tomorrow's Leader(இன்றைய வாசகர் நாளைய தலைவர்)என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. மேலும்,நூலகம் சார்ந்த பொது அறிவு வினாடி வினா போட்டி நடைபெற்று வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. முதல்வர் முனைவர்.கி. வெங்கடாசலம் தலைமை உரை வழங்கினார். இந்நிகழ்வின் வரவேற்புரையை கணினி பயன்பாட்டியல் துறைத்தலைவர் முனைவர் செ.பிரேமா வழங்கினார். வாழ்த்துரையை தமிழ்த்துறை துறைத்தலைவர் முனைவர் மா. வசந்தகுமாரி,முனைவர்.எ. திருமலை ராஜா,முனைவர்.சி.நளினி,சிறப்பு விருந்தினர் பற்றிய அறிமுக உரையை வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர்.மோ. மெய்ஞானம் வழங்கினார். சிறப்பு விருந்தினராக சேலம், பெரியார் பல்கலைக்கழக நூலகர் முனைவர்.M.ஜெயபிரகாஷ்அவர்கள் கலந்து கொண்டு "மாணவ/ மாணவியர்கள் தங்களை வாழ்வில் மேம்படுத்திக் கொள்ள நூலகத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்" என்பது பற்றிய சிறப்பு சொற்பொழிவை வழங்கினார். நன்றி உரையை நூலகர் மற்றும் இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமாகிய முனைவர்.பா. ஜெகன் வழங்கினார். இந்நிகழ்வை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியருமாகிய முனைவர் வெ.சித்ரா அவர்கள் தொகுத்து வழங்கினார்.மேலும் இந்நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்கள், உதவிப் பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story