தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சார்பில்

தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளர் சார்பில்
24 மனை தெலுங்கு செட்டியார் மாநாட்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி
சேலம் மாவட்டம் ஒமலூரில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 24 மனை தெலுங்கு செட்டியார் சமுதாய மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டு அழைப்பிதழை, தி.மு.க. அயலக அணி மாவட்ட அமைப்பாளர் வக்கீல் திருநாவுக்கரசுவிடம், மாநாட்டு நிர்வாகி ஜெகநாத் மிஸ்ரா நேரில் வழங்கினார். பின்னர் கோணஞ்செட்டியூர் வம்மையர் குல பங்காளிகள் சார்பிலும், அவரது சார்பிலும் மாநாட்டுக்கு ரூ.1 லட்சம் நிதியை நன்கொடையாக ஊர் செட்டியார் பன்னீர்செல்வம், வக்கீல் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில் திருநாவுக்கரசு வழங்கினார். இதில் 24 மனை செட்டியார் சமுதாய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story