அம்மனுக்கு திருவிழா முடிந்தவுடன் கோவிலை இடியுங்கள் என வேண்டுகோள் வைத்த திருநங்கைகள்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகள் தடுத்து நின்ற இந்து மற்றும் கிறிஸ்த்துவ மதத்தினர் அம்மனுக்கு திருவிழா முடிந்தவுடன் கோவிலை இடியுங்கள் என வேண்டுகோள் வைத்த திருநங்கைகள்
பூந்தமல்லி அடுத்த மாங்காடு அருகே பட்டு கூட்டுச்சாலையில் இருந்து மௌலிவாக்கம் செல்லும் சாலையில் ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சாலை ஓரமுள்ள ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணியில் இன்று ஈடுபட்டனர். இந்த நிலையில் அந்த பகுதியில் திருநங்கைகள் அதிகமாக வசித்து வருகின்றனர் அவர்கள் வழிபடுவதற்க்காக பெரியபாளையத்தம்மன் கோவில் ஒன்றை கட்டி வருட வருடம் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த திருவிழாவில் அப்பகுதியைச் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம் இந்த நிலையில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்த வேண்டும் என கூறிய நிலையில் அதனை எதிர்த்து திருநங்கைகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர் .மேலும் திருவிழா நடக்க உள்ள நிலையில் அது முடிந்தவுடன் இடித்துக் கொள்ளுங்கள் என கால அவகாசம் கேட்டு வேண்டுகோள் வைத்தனர் இதனால் .அப்பகுதியில் பெரும் பரபரப்பானது ஏற்பட்டது. அதேபோன்று இதன் அருகே சிஎஸ்ஐ தேவாலயம் ஒன்றும் அமைந்துள்ளது அந்த தேவாலயமும் ஆக்கிரமிப்பில் வருவதாக கூறி அதிகாரிகள் ஜேசிபி எந்திரம் கொண்டு அதனை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர் அப்போது ஒன்று திரண்ட கிறிஸ்தவர்கள் தேவாலயத்தை இடிக்க வேண்டாம் என அரசு அதிகாரிகளிடம் வேண்டுகோள் வைத்தனர் மேலும் எங்களுக்கும் கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்து மற்றும் கிறிஸ்தவ அமைப்பினர் தங்களது வழிபாட்டு தளத்தினை இடிக்க வேண்டாம் என அரசு அதிகாரிகளை தடுத்து நின்றதும் அதேபோல் ஆக்கிரமிப்பு என கூறப்படும் கோவில்களை அகற்ற கால அவகாசம் கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story