ஆர்.ஐ.,பேச்சுவார்த்தையால் முற்றுகை போராட்டம் நிறுத்தம்

ஆர்.ஐ.,பேச்சுவார்த்தையால் முற்றுகை போராட்டம் நிறுத்தம்
இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் உள்ள காளியம்மன் கோவிலை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்துதர வேண்டும் என வலியுறுத்தி மா.,கம்யூ., கட்சியின் சார்பில் நடைபெற இருந்த முற்றுகை போராட்டம் ஆர்.ஐ., பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.
எலச்சிபாளையம் யூனியன், இலுப்புலி கிராமம், மாரப்பம்பாளையம் அருந்ததியர் தெருவில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் காளியம்மன் கோவில் அமைத்து கடந்த 20 வருடங்களுக்கு மேலாக வழிபட்டு வருகின்றனர். இதன் அருகாமையில் உள்ள தனி ஒரு நபர் ஒருவர் இக்கோவில் முன்பு ஆக்கிரமிப்புசெய்து வந்ததையடுத்து இப்பகுதி பொதுமக்கள் காளியம்மன் கோவிலை அரசு பதிவேட்டில் பதிவேற்றம் செய்து தர வேண்டும் என நேற்று, மா.கம்யூ.,கட்சிசார்பில் எலச்சிபாளையம் ஆர்.ஐ.,அலுவலகம் முன்பாக, முற்றுகை போராட்டம் நடத்தப்படும் அறிவித்தனர். இதனையடுத்து, முற்றுகையிடவந்த மா.கம்யூ.,கட்சியினரிடம் ஆர்.ஐ., அனுராதா பேச்சுவார்த்தை நடத்தி, வருகின்ற 19ஆம் தேதியன்று இரு தரப்பினரையும் அழைத்து பிரச்சனையை தீர்வு காணுவதாக உறுதியளித்தார். இதனைத்தொடர்ந்து, நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இதில், மா.கம்யூ., கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் பழனியம்மாள், மூத்த தோழர் சுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ரமேஷ், ஈஸ்வரன். கிளைச் செயலாளர் தங்கவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story