அரவக்குறிச்சியில் கணவனிடம் தெரிவிக்காமல் மகள்களுக்கு காது குத்தியதால் தகராறு.
Karur King 24x7 |14 Aug 2024 12:56 PM GMT
அரவக்குறிச்சியில் கணவனிடம் தெரிவிக்காமல் மகள்களுக்கு காது குத்தியதால் தகராறு.
அரவக்குறிச்சியில் கணவனிடம் தெரிவிக்காமல் மகள்களுக்கு காது குத்தியதால் தகராறு. கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, வடக்கு தெருவை சேர்ந்தவர் சலித்பிரேம் மனைவி சாரா வயது 29. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ஆகஸ்ட் 9-ம் தேதி சாரா மற்றும் அவரது தாயார் செலின் மேரி ஆகியோர் சாராவின் மகள்களுக்கு அரவக்குறிச்சி பகுதியில் உள்ள நகை கடையில் காது குத்தியுள்ளார். இது குறித்து கணவன் சலீத் பிரேமிடம் சாரா தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 10 மணியளவில் கணவன்- மனைவி இருவருக்கும் அவர்களது வீட்டில் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சாராவின் தாயாரும் உடந்தையாக செயல்பட்டதாக கூறி, சலீத் பிரேம் இருவரையும் தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கியும், காலால் உதைத்தும் இருவரையும் துன்புறுத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் சாராவின் தாயார் செல்லின் மேரிக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாரா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், தகாத செயலில் ஈடுபட்ட சலித் பிரேமை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.
Next Story