நாணபரப்பு அருகே டூவீலரில் வேகமாக சென்றதால், கீழே விழுந்து வாலிபர் உயிரிழப்பு.

நாணபரப்பு அருகே டூவீலரில் வேகமாக சென்றதால், கீழே விழுந்து வாலிபர் உயிரிழப்பு.
நாணபரப்பு அருகே டூவீலரில் வேகமாக சென்றதால், கீழே விழுந்து வாலிபர் உயிரிழப்பு. கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுகா, மோதிநகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு வயது 47. இவர் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு 7 மணி அளவில், சேலம் -கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் நாணப்பரப்பு பிரிவு அருகே சென்ற போது, டூவீலரை வேகமாக இயக்கியதால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து, விபத்து ஏற்பட்டது. இதில் பாபுவுக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு, கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பாபு ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பாபுவின் மனைவி ஷாலினி வயது 39 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பாபுவின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து,இது தொடர்பாக டூவீலரை வேகமாக ஓட்டி விபத்து ஏற்பட காரணமான பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story