மாணவி பலாத்காரத்திற்கு நடவடிக்கை கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்:
T.gode (Mallasamudram) King 24x7 |14 Aug 2024 2:26 PM GMT
மேற்கு வங்கத்தை சேர்ந்த, மருத்துவ மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரி ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வையப்பமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேற்குவங்க மாநிலம், கல்கத்தாவில் மருத்துவ மாணவியை கும்பலாக ஒன்று சேர்ந்து பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், நாடு முழுவதும் நடந்தது. அதன் ஒரு பகுதியாக மல்லசமுத்திரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வையப்பமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் , கையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பழனியம்மாள் தலைமை வகித்தார் ஒன்றிய தலைவர் சாந்தி, செயலாளர் மோகனப்பிரியா, மாவட்ட குழு உறுப்பினர் செல்லம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story