வீரராக்கியத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை. மூன்று பேர் மீது போக்சோ வில் வழக்கு பதிவு.
Karur King 24x7 |14 Aug 2024 3:17 PM GMT
வீரராக்கியத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை. மூன்று பேர் மீது போக்சோ வில் வழக்கு பதிவு.
வீரராக்கியத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை. மூன்று பேர் மீது போக்சோ வில் வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வீரராக்கியம் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் வயது 39. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் 12 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை கண்டிக்க வேண்டிய சிறுமியின் தாயாரும்,பாட்டியும் சபரிநாதனுக்கு உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சபரிநாதன், சிறுமியின் தாயார் மற்றும் பாட்டி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர்.
Next Story