பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி ரிக் தொழிலாளி பலி.

பரமத்தி அருகே மின்சாரம் தாக்கி ரிக் தொழிலாளி பலி.
பரமத்தி வேலூர் அருகே மின்சாரம் தாக்கி ரிக் தொழிலாளி பலியானது குறித்து பரமத்தி போலிசார் விசாரணை.
பரமத்தி வேலூர் ஆகஸ்.14:- சட்டீஸ்கர் மாநிலம் மன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் மகருராம் என்பவரது மகன் மகேந்திரகுமார் (21). ரிக் தொழிலாளி. இவர் பரமத்தி வேலூர் வட்டம் பில்லூர் பகுதியைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது ரிக் வண்டியில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்  செவ்வாய்க்கிழமை இரவு ரிக் வண்டியில் வெல்டிங் பணி செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்துள்ளதாக தெரிகிறது. அப்போது வெல்டிங் இயந்திரத்தில் இருந்த எலக்ரிக் ஒயர் உருகி எதிர்பாராத விதமாக மகேந்திரகுமார் மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மகேந்திரகுமாரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி கூடச்சேரியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக கொண்டு சென்றன்ர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் மருத்துவகல்லூரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மகேந்திரகுமார் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளர். தகவல் அறிந்து மருத்துவனைக்கு சென்ற பரமத்தி போலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேதபரிசோதனைக்கு சேர்த்தனர். மேலும் மகேந்திரகுமார் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story