ஏரியிலுள்ள கருவேல மரங்களை அனுமதியின்றி வெட்டியதால் பொதுமக்கள் முற்றுகை
Edappadi King 24x7 |14 Aug 2024 4:22 PM GMT
எடப்பாடி அருகே ஏரியிலுள்ள கருவேல மரங்களை அனுமதி இல்லாமல் வெட்டி எடுத்து ஜீப் வாகனத்தில் ஏற்றி செல்ல முயன்ற போது பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறை பிடித்து எடப்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்த இச்சம்பவத்தால் பரபரப்பு...
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சியில் உள்ள வெடிகாரன்பாளையம் ஏரியில் இருக்கும் பெரிய சீமைவோலாண் (கருவோலான்) மற்றும் வேப்பமரங்களை அரசு அனுமதியின்றி சிலர் வெட்டி எடுத்து லாரிகளில் எடுத்துச் சென்ற வண்ணம் இருந்துள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மரத்தை வெட்டி எடுத்த நபர்களிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததை தொடர்ந்து பொலிரோ ஜிப்பில் மரங்களை ஏற்றி செல்ல முயன்ற போது வாகனத்தை சிறை பிடித்து எடப்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். அந்த வாகனத்தை மரங்களோடு பறிமுதல் செய்து எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அரசு அனுமதி இல்லாமல் ஏரிகளில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து டெம்போவில் ஏற்றி செல்ல முயற்சித்தபோது பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறை பிடித்து எடப்பாடி வட்டாட்சியரிடம் ஒப்படைத்த இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
Next Story