சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு

விழிப்புணர்வு ஏற்படுத்திய டிஎஸ்பி
பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா உத்தரவின்படி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் துணைக் காவல் கண்காணிப்பாளர் வளவன் மற்றும் புள்ளியியல் ஆய்வாளர் சாகித் உதவி ஆய்வாளர் நடராஜன் ஆகியோர்கள் இன்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ரோவர் வேளாண் கல்லூரியில் பயிலும் மாணவர்களிடம் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ மாணவியர்களிடத்தில் 1.சமூக நீதி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டம் குறித்த விதிகள். 2.பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் தொடர்பான வழிப்புணர்வு 3.சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு 4.கள்ளச்சாராயம் கஞ்சா போன்ற போதைப்பொருட்களை உபயோகப்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் 5.பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கு அரசால் வழங்கப்படும் நலதிட்ட உதவிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கல்வியின் முக்கியத்துவங்கள் மற்றும் அதன் சிறப்பியல்புகள் பற்றியும் கட்டாயம் கல்வி கற்றால் தான் சிறந்த மனிதனாகவும் சிறப்பன ஆற்றல் மிக்கவராகவும், நல்லெண்ணம் நற்செயல் நற்பண்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு நபராக இருக்க முடியும் என்று கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story