காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்து மருந்து குடித்த கூலித்தொழிலாளி

காவல்துறையினர் தாக்கியதால்   மனமுடைந்து மருந்து குடித்த கூலித்தொழிலாளி
எடப்பாடி அருகே காவல்துறையினர் தாக்கியதால் மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற கட்டிட கூலி தொழிலாளி அருள் என்பவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இச்சம்பவத்தால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் சித்தூர் ஊராட்சிக்குட்பட்ட வெடிக்காரன்பாளையம் பகுதியில் வசிப்பவர் அருள்(23). கட்டிட கூலி தொழிலாளியான இவருக்கு கனகவள்ளி என்கிற மனைவியும் ஒன்றரை வயது தன்சிகா என்கிற ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.. இந்நிலையில் கடந்த மாதம் அருள் தனது அப்பாச்சி இரு சக்கர வாகனத்தில் சித்தூர் அருகே சென்ற போது நாய்கள் சாலையின் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே தூக்கி வீசப்பட்டதோடு அப்பாச்சி வாகனம் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த சித்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணி புரியும் ஜெயக்குமாரி என்பவரின் இருசக்கர வாகனத்தில் மோதியதில்  அந்த வாகனம் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சேதமடைந்த வாகனத்தை சரி செய்து தருவதாக அருள் கூறியதால் காவல் நிலையத்தில் யாரும் எந்த புகாரும் அளிக்கவில்லை. மேலும் சேதமடைந்த இருசக்கர வாகனத்தை எடப்பாடியில் சரி செய்து தருவதாக அருள்  கூறியதாகவும் ஆனால் செவிலியர் ஜெயக்குமாரி ஜலகண்டாபுரம் ஷோரூமில் தான் சரி செய்வேன் என்று அடம்பிடித்ததாகவும் இதனால் அந்த வாகனத்தை சரி செய்து தருவதில் தாமதம் ஆகி உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செவிலியர் ஜெயக்குமாரி ஆகஸ்ட் 13ம் தேதி  பூலாம்பட்டி காவல் நிலையத்தில் அருள் மீது புகார் அளித்ததின் பேரில் புகார் ரசீது வழங்கிய போலீசார் விடியற்காலை ஐந்து மணிக்கு அருளின் வீட்டிற்கு சென்று அவரது அப்பாச்சி இருசக்கர வாகனத்தை  எடுத்துக் கொண்டு  காலை 9 மணிக்குள் காவல் நிலையம் வராவிட்டால் முதல் தகவல் அறிக்கை செய்து ஜெயிலில் அடைத்து விடுவேன் என தலைமை இடத்து காவலர் ஈஸ்வரன் மிரட்டி விட்டு வந்ததாகவும் அதன் பின்னர் காவல் நிலையம் வந்த அருளை புகார் அளித்த செவிலியர் ஜெயக்குமாரியின் கண் முன்னே அருளை போலீசார் கடுமையாக தாக்கி செல்போனை பிடுங்கிக் கொண்டதாகவும் இதனால் மனமுடைந்த அருள் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்று எடப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே இச் சம்பவம் நிகழ்ந்து ஒரு மாத காலம் ஆகியும் புகார் அளிக்காத செவிலியர் ஜெயக்குமாரி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பூலாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து போலீசார் தனது பாணியில் விசாரணை மேற்கொண்டதால் மனமுடைந்த கட்டிட கூலித்தொழிலாளி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற இச்சம்பவம் எடப்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
Next Story