புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை
Kangeyam King 24x7 |15 Aug 2024 2:06 AM GMT
வெள்ளக்கோவிலில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் தூக்குப்போட்டு தற்கொலை. காவல்துறை விசாரணை
வெள்ளகோவில் மேட்டுப்பாளையம் அய் யம்பாளையம் நால்ரோட்டைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 59). இவருடைய மனைவி சாவித்திரி (55). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தை இல்லை. மனைவி இறந்த பிறகு முருகேசன் நாகமநாயக்கன் பட்டியில் உள்ள தனது சகோதரர் மகள் கமலவேணி வீட்டில் தங்கி இருந்து சுமை தூக்கும் கூலி வேலை செய்துவந்தார். முருகேசன் கடந்த சில வருடங்களாக புற் றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை இத னால் மனமுடைந்த அவர் நேற்று முன்தி னம் இரவு நாகமநாயக்கன்பட்டி வீட்டில் தூக்கு போட்டுக்கொண்டார். அருகில் இருந்த கமலவேணி,அவரது உறவினர் கமலேஷ் இருவரும் அவரை மீட்டு தனி யார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து கமலவேணி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story