சமுதாயக்கூடம் மற்றும் கல்லூரி விடுதியினை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்

சமுதாயக்கூடம் மற்றும் கல்லூரி விடுதியினை காணொளி வாயிலாக முதல்வர் திறந்து வைத்தார்
திறப்பு விழா நிகழ்ச்சி
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதிக்கழத்தின் மூலம் வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தையும், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவியர் விடுதி கட்டிடத்தினையும், காணொளிக்காட்சி வாயிலாக (14.08.2024) சென்னை, தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் மலையாளப்பட்டி ஊராட்சியில் ரூ.1.55 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை குத்து விளக்கேற்றி, பார்வையிட்டனர். அதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டையில் ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் கல்லூரி மகளிர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து விடுதியினை பார்வையிட்டனர்.
Next Story