குமரி கடலோரப்பகுதிகளில் கலெக்டர் திடீர் ஆய்வு

X
கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறையின் சார்பில் மணக்குடி கடலோரப்பகுதி மற்றும் சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்- கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுக கட்டுமான பணிகள் 1984-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு மீன்பிடி துறைமுகம் மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. தற்போது சின்னமுட்டம் துறைமுத்தை தங்குதளமாக கொண்டு 325 இழுவலை விசைப்படகுகளும், 50 தூண்டில் படகுகளும் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுகத்தில் உள்ள மீன்பிடி முறைகள், பிடித்து வரும் மீன்கள், மீன்பிடி தொழிலில் அன்றாடம் சந்தித்து வரும் பிரச்சனைகள், சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திலுள்ள கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த உருவாக்கப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள், மீன்பிடி துறைமுகத்தில் பராமரிப்பு பணிகள் மற்றும் சில கூடுதல் பணிகள் மேற்கொள்வது குறித்து துறை அலுவலர்களுடன் கேட்டறியப்பட்டது. இவ்வாறு கூறினார். நடைபெற்ற ஆய்வில் மீன்வளத்துறை துணை இயக்குநர் மா.சின்னகுப்பன், உதவி இயக்குநர் வெ.தீபா, உதவி செயற்பொறியாளர் எஸ்.பிரேமலதா, மீன்பிடி துறைமுக திட்ட கோட்டம் ஆகிய அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

