நாமக்கல் சுதந்திர தின விழா: ஆட்சியா் ச.உமா தேசியக் கொடி ஏற்றி மரியாதை

மாவட்ட ஆட்சியர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண் புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டார்கள்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (15.08.2024) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் ச.உமா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். சுதந்திர தின விழாவை கொண்டாடும் விதமாக மாவட்ட ஆட்சியர் ச.உமா, காவல் கண்காணிப்பாளர் எஸ்.இராஜேஸ் கண்ணன் ஆகியோர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் வானில் பறக்க விட்டார்கள். மேலும், சுதந்திர போரட்ட வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் அவர்தம் வாரிசுதாரர்களை சிறப்பு செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கதர் ஆடை அணிவித்து பரிசுகளை வழங்கினார். பின்னர், அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக 100 ஆயுதப்படை காவலர்கள், ஊர்க்காவல் படையினருக்கும், காவல்துறை பேண்ட் வாத்தியக்குழுவினருக்கும் மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்து, கேடயங்களை வழங்கினார்.
Next Story