மினி லாரி சாலையில் கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்

மினி லாரி சாலையில் கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்
மதுராந்தகம் சென்னை - திருச்சி புறவழி சாலையில் மினி லாரி மீது கண்டெய்னர் லாரி மோதல் மினி லாரி சாலையில் கவிழ்ந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் என்ற இடத்தில்சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற மினி லாரி மற்றும் கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்த பொழுது முன்னாள் சென்ற மினி லாரி மீது கண்டைனர் லாரி மோதியதில் மினி லாரி சாலையில் கவிழ்ந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நெரிசல் காணப்படுகிறது.. லாரி அகற்றும் பணியில் மதுராந்தகம் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.. கண்டெய்னர் லாரி அதிக பாரம் என்பதால் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டு வருகிறது.. சாலையில் கவிழ்ந்த மினி லாரி ஓட்டுநருக்கு சிறுகாயம் ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story