சேலத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை
Salem (west) King 24x7 |15 Aug 2024 8:50 AM GMT
போலீசார் விசாரணை
சேலம் கன்னங்குறிச்சி சின்ன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சபரி (வயது 29), கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு படுக்க தனது அறைக்கு சென்றார். காலையில் இவரது தாயார் மகனின் அறைக்கு சென்று பார்த்த போது சபரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து சபரியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் அங்கு விரைந்து வந்து கட்டிட தொழிலாளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சபரியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story