சேலத்தில் அழகு நிலையத்தில் நகை திருடிய பெண்ணுக்கு ஓராண்டு ஜெயில்
Salem (west) King 24x7 |15 Aug 2024 8:53 AM GMT
சேலம் கோர்ட்டில் தீர்ப்பு
சேலம் மெய்யனூர் பகுதியை சேர்ந்தவர் நித்யா (வயது 35). இவர் 5 ரோடு அருகே அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி அவரது அழகு நிலையத்தில் 7 பவுன் நகை திருட்டு போனது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அழகு நிலையத்தில் நகை திருடியதாக சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்த டெய்சி (40) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை சேலம் 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட டெய்சிக்கு ஓராண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு தினேஷ்குமரன் தீர்ப்பு கூறினார்.
Next Story