எடப்பாடியில் பூமிதி திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன்

X
Edappadi King 24x7 |15 Aug 2024 2:59 PM ISTஆடி திருவிழாவை முன்னிட்டு எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட மேட்டுத்தெரு சின்ன மாரியம்மன் மற்றும் க.புதூர் ஓம் காளியம்மன் கோவில்களில் நடைபெற்ற பூமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட க.புதூர் ஓம் காளியம்மன் மற்றும் மேட்டுத்தெரு சின்ன மாரியம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பூமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக நேற்று இரவு சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்று இன்று காலை பக்தர்கள் சரபங்கா ஆற்றிற்க்கு சென்று பூங்கரகம் ஜோடிக்கப்பட்டு சிலர் முதுகில் பல்வேறு வகையான அலகுகளை குத்திக்கொண்டு கார், டிராவல்ஸ் ஆகியவற்றை கோவில் வரை இழுத்து வந்து பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த பூமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பூ மிதித்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் சுவாமிகளை வழிபட்டு சென்றனர்.
Next Story
