தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசு

X
திருச்செங்கோடு சண்முகபுரம் பகுதியில் அக்னி சிறகுகள் நற்பணி இயக்கத்தின் சார்பில் 78வது சுதந்திர தின விழா நடைபெற்றது.வழக்கறிஞர் பரணிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு சுதந்திர பாரதம் என்ற தலைப்பில் விழா பேருரை ஆற்றினார். தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு கல்வி ஊக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சுதந்திர தின மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில் விபிசி செல்வம் மாதேஸ்வரன் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

