கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்

கிருஷ்ணகிரியில் மாவட்ட ஆட்சியர் சரயு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின விழா கொண்டாடினர்
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு நமது தேசியக்கொடியினை ஏற்றி வைத்து,காவல் துறையினர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர் ..................................................... சுதந்திர இந்தியாவின் 78-வது சுதந்திர தின விழா கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது, இந்த விழாவில் கலந்துக் கொண்ட மாவட்ட ஆட்சியர் திருமதி சரயு அவர்கள் கொடிக்கம்பத்தில் நமது தேசியக்கொடியான மூவர்ணக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் காவல் துறையினர்களின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் திருமதி சரயு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை ஆகியோர் கூட்டாக ஏற்றுக் கொண்டனர். பின்னர் நாட்டில் அமைதியும், சமதானம் மேலோங்கிடும் வகையில் புறா மற்றும் வண்ணப் பலூன்களையும் வானூயர நோக்கி பறக்கவிட்டனர், இதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்டத்திற்காக தன்னை ஆர்பனித்த தியாகிகளின் வாரிசுதாரர்களை ஆட்சியர் சரயு பொன்னாடை போர்த்தி கெளரவித்து மாவட்டத்தில் சிறப்பாக காவல் பணியினை மேற்கொண்ட காவல் துறையினர்களுக்கு பதங்கங்களையும் வழங்கி சிறந்த முறையில் அரசுப் பணிகளில் மேற்கொண்ட அரசு அலுவர்களின் செயலைப் பாராட்டி ஆட்சியர் நற்சான்றிதழ்களையும் வழங்கி நலியுற்ற 42 பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் வழங்கினார், இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைப்பெற்றது, இந்த சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சோபிநாத் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் இந்த விழாவில்கலந்துக் கொண்டனர்
Next Story