எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா
Sholavandan King 24x7 |15 Aug 2024 2:41 PM GMT
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சுதந்திர தின விழா மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜ வடிவேல் முன்னிலை வகித்தார். ஆசிரியை அருவகம் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் நாகலட்சுமி தேசிய கொடியை ஏற்றி வாழ்த்துரை வழங்கினார். இல்லம் தேடி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவகுருநாதன் சுதந்திர தின உரை நிகழ்த்தினார். மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், மெடல்கள் வழங்கப்பட்டன. மாணவ, மாணவிகளின் பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் மாறுவேடம், பறை இசை, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பம், நடனம் மற்றும் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காந்தியடிகள் இராட்டையில் அமர்ந்து நூல் நூற்பது போல் மாறுவேடம் அணிந்து வந்த மாணவன் அனைவரையும் கவர்ந்தார். ஆசிரியை விஜயலட்சுமி தொகுத்து வழங்கினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் நூர் முகமது, துணை ஊராட்சி மன்ற தலைவர் முருகேஸ்வரி, வார்டு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை சித்ரா நன்றி கூறினார் விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியை அனுசியா, மனோன்மணி, தமிழ்ச்செல்வி, அகிலா, அம்பிகா, சுகுமாறன் ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story