கபிலக்குறிச்சி ஊராட்சியில் அனைவருக்கும் குடிநீர்,கனவு இல்லம் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்.
Paramathi Velur King 24x7 |15 Aug 2024 3:13 PM GMT
கபிலக்குறிச்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் அனைவருக்கும் குடிநீர் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் அனைவருக்கும் வீடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. பரமத்தி வேலூர் வட்டம் கபிலக்குறிச்சி ஊராச்சி அலுவலகத்தின் சுதந்திரதின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் கபிலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் வடிவேல் தேசிய கொடியை ஏற்றினார். பின்னர் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஆண்டு அறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் கடந்த 4 ஆண்டுகளில் சுமார் ரூ.7 கோடி அளவில் நலத்திட்டம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு திட்டங்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர்,கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள அனைவருக்கும் வீடு,சுத்தமான குடிநீர்,சுகாதாரமான கழிப்பிட வசதி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறேவேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தனிக்கையாளர் மோகனப்பிரியா,பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் ஊர் மொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story