சிறுமியின் படத்தை ஆபாசமாக சித்தரித்த தொழிலாளி போக்சோவில் கைது

X
திண்டுக்கல் மாவட்டம் பெத்தனம் பட்டியைச் சேர்ந்த மூக்கையன் என்பவரது மகன் முத்துப்பாண்டி (வயது 19). இவர் கூலி வேலை செய்து வருகிறார். கடந்த மாதம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு காங்கேயம் பகுதியில் சேர்ந்த 14 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பழகி வந்துள்ளார். பின்னர் அந்த சிறுமியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சிறுமியிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் காங்கேயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் முத்துப்பாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து திருப்பூர் சிறையில் அடைத்தனர்.
Next Story

