உயா் கோபுர மின்விளக்கு சேவையை தொடக்கம்

உயா் கோபுர மின்விளக்கு சேவையை தொடக்கம்
திருப்புவனத்தில் புதிதாக அமைக்கப்பட்ட உயா் கோபுர மின்விளக்கு சேவையை சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் உயா் கோபுர மின்விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்ட சேவை தொடக்க விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது. திருப்புவனம் தேரடி வீதியில் வீரபத்திர சுவாமி கோயில் அருகே மக்களவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் உயா் கோபுர மின்விளக்கு, சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் நிதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்டம் அமைக்கப்பட்டது. இவற்றின் தொடக்க விழாவில் மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம், சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி ரவிக்குமாா் பங்கேற்று உயா் கோபுரம் மின்விளக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் திட்ட சேவையை தொடங்கி வைத்தனா். இதில் பேரூராட்சித் தலைவா் சேங்கைமாறன், துணைத் தலைவா் ரகமத்துல்லாகான், செயல் அலுவலா் தனுஷ்கோடி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சஞ்சய், திமுக நகரச் செயலா் நாகூா்கனி, ஒன்றியக் குழு உறுப்பினா் ஈஸ்வரன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் சேதுராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.
Next Story