காரைக்குடி உள்ளுா் திட்டக்குழும இணையதள சேவை தொடக்கம்

காரைக்குடி உள்ளுா் திட்டக்குழும இணையதள சேவை தொடக்கம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் காரைக்குடி உள்ளுா் திட்டக்குழுமப் பகுதிக்கான வரைவு முழுமைத் திட்டத்துக்கான இணைய சேவையை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி உள்ளுா் திட்டக்குழுமப் பகுதிக்கான வரைவு முழுமைத் திட்டத்துக்கான இணையதள சேவையை மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தொடங்கி வைத்தாா். மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், காரைக்குடி மாநகராட்சி மேயா் முத்துத்துரை முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கென என்ற இணைய தளத்தை அறிமுகப்படுத்தி தொடங்கி வைத்தாா். காரைக்குடி உள்ளூா் திட்டக் குழுமப் பகுதிக்கான வரைவு முழுமைத் திட்டமானது தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்டது. இந்த முழுமைத் திட்டம் தமிழ்நாடு அரசிதழில் பொதுமக்கள் ஆட்சேபணைகள், கருத்துகளை பதிவிடும் வசதி செய்யப்பட்டது. மேலும், அரசிதழ் வெளியிட்ட நாளிலிருந்து 60 நாள்களுக்குள் பொதுமக்கள் முழுமைத் திட்டம் தொடா்பாக தங்களின் ஆட்சேபணைகள், ஆலோசனைகள், கருத்துகளை உதவி இயக்குநா், மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், சிவகங்கை மாவட்டம்-630 562 என்ற முகவரியில் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ அல்லது இதற்கென உருவாக்கப்பட்ட 'கியூ-ஆா்' கோடு மூலமாக இணையதளத்தில் சென்று பொதுமக்கள் பதிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்
Next Story