கூவம் நதிக்கரை குடியிருப்பு பகுதியில் திருவள்ளூர் எம்பி ஆய்வு
Tiruvallur King 24x7 |16 Aug 2024 5:24 AM GMT
திருவேற்காட்டில் கூவம் நதிக்கரை அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சசிகாந்த் செந்தில் எம்பி ஆய்வு எல்லா வலியையும் தாங்க கூடிய மக்கள் தலித் மக்கள் அதனால்தான் அவர்களுடன் நிற்கிறோம் என அவர் தெரிவித்தார்
திருவேற்காட்டில் கூவம் நதிக்கரை அருகே உள்ள குடியிருப்பு பகுதியை சசிகாந்த் செந்தில் எம்பி ஆய்வு எல்லா வலியையும் தாங்க கூடிய மக்கள் தலித் மக்கள் அதனால்தான் அவர்களுடன் நிற்கிறோம் என அவர் தெரிவித்தார் திருவேற்காடு நகராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குறிப்பாக கூவம் நதிக்கரையை ஒட்டி மேடான பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்புகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும் நீர் பிடிப்பு பகுதிகளில் இந்த குடியிருப்புகள் இருப்பதாக கூறி அகற்றுவதற்காக வருவாய் துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், முற்றுகை, சாலை மறியல் உள்பட பல்வேறு போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில் திருவள்ளுவர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் இந்த குடியிருப்பு பகுதியை நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திருவேற்காடு நகர் மன்ற துணைத்தலைவர் ஆனந்தி ரமேஷ் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்புகளின் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் சசிகாந்த் செந்தில் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர். அப்போது கூவம் நதிக்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதி மேடான இடத்தில் உள்ளது. இதற்குமுன் பல தடவை மழை வெள்ளத்தின் போதும் சிறிதுகூட இந்த பகுதி பாதிக்கப்படவில்லை திருவேற்காட்டின் பூர்வ குடிகளான நாங்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். இந்த ஊரின் பூர்வீக குடிமக்களான எங்களின் இந்த குடியிருப்புகளை அகற்றக்கூடாது என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகளிடமும் பலமுறை மனு அளித்துள்ளோம். ஆனால் தற்போது அதிகாரிகள் இந்த குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நீண்ட காலமாக குடியிருந்து வரும் எங்கள் குடியிருப்புகளை அகற்றக்கூடாது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இது குறித்து எம்.பி. சசிகாந்த் செந்தில் அளித்த பேட்டியில் : வெள்ள பாதிப்பு வந்தால் நாமே அதை எடுத்து விடலாம் ஆனால் அது போன்ற எந்த பாதிப்பும் இங்கு இல்லை, நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை தேவையில்லாமல் அனுப்புவது சரி இல்லை, இந்த நிலம் எடுப்பு என்பது தேவையில்லாதது என முதல்வரிடம் தெரிவிப்போம், அதனை அரசு செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது மக்களுக்கும் அரசின் சார்பில் வாக்குறுதியை அளிக்கிறேன், எல்லா வலியையும் தாங்கக்கூடிய மக்கள் தலித் மக்கள் தான், கூவம் நதியில் எல்லா இடத்தையும் விட இங்கு தான் பரப்பளவு அதிகமாக உள்ளது. ஆளுநரை முழுமையாக எதிர்ப்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என தெரிவித்தார். தொடர்ந்து கோரிக்கைகளை பொதுமக்கள் வைத்து வந்த நிலையில் திடீரென எம்பி வீட்டில் என்ன சமையல் என கேட்ட நிலையில் அங்கிருந்த பெண்கள் அவரை வீட்டிற்கு சாப்பிட அழைத்தனர் அவர் பணிகளை முடித்துவிட்டு சாப்பிடுவதாக கூறிய நிலையில் திடீரென பெண் ஒருவர் நீங்கள் வருகிறீர்கள் என்பதால் வீட்டில் சமையல் ஏதும் செய்யவில்லை எனக் கூறியதால் அங்கு சிரிப்பளை எழுந்தது
Next Story