காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் இடமாற்றம்
Kangeyam King 24x7 |16 Aug 2024 5:54 AM GMT
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் துணை காவல் கண்காணிப்பாளராக கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வந்தவர் கு. பார்த்திபன். இவர் காங்கேயம் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்குட்பட்ட காங்கேயம், ஊதியூர், வெள்ளகோயில், ஊத்துக்குளி காவல் நிலையங்களும் காங்கேயம் போக்குவரத்துக் காவல் நிலையம் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் உட்பட ஆறு காவல் நிலையங்கள் டிஎஸ்பி பார்த்திபன் கட்டுப்பாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக இருந்து வந்தது இவர் பணியாற்றிய அந்த இரண்டு வருடங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் கொலை வழக்குகளை திறம்பட விசாரித்து உண்மை குற்றவாளிக்கு சிறை தண்டனை பெற்று தந்தவர். இந்நிலையில் இவர் காங்கேயம் காவல்துணை கண்காணிப்பாளராக பணியமர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Next Story