திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்,எல்,ஏ, மறைவுக்கு திரளான பொதுமக்கள் இறுதி அஞ்சலி
Tirupathur King 24x7 |16 Aug 2024 6:10 AM GMT
திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்,எல்,ஏ, மறைவுக்கு திரளான பொதுமக்கள் இறுதி அஞ்சலி
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் முன்னாள் அதிமுக எம்,எல்,ஏ, கே ஜி, ரமேஷ் மறைவுக்கு திரளான பொதுமக்கள் இறுதி அஞ்சலி செய்து வருகின்றனர் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்த போது திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை குக்கிராமத்தில் கோபால்ரெட்டி மனைவி பத்மாவதி தம்பதிக்கு நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் என 6 குழந்தைகளில் நான்காவதாக 07.01.1965ஆம் ஆண்டு கே.ஜி.ரமேஷ் பிறந்தார். இவர் பள்ளி படிப்பை காக்கங்கரை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளியிலும்,நத்தம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் உயர்கல்வியும் படித்தார். பின்னர் இவருக்கு திருமணமாகி ப்ரதீபா என்கிற மனைவியும் சிவ்நாராயன் என்கிற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் காக்கங்கரை ஊராட்சியில் கவுன்சிலராக போட்டியிட்டு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து கந்தலி ஒன்றிய குழுத்தலைவராக அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வந்த நிலையில் அவருக்கு மறைந்த முதல்வர்.புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கந்திலி ஒன்றிய செயலாளராக பதவி வழங்கினார். பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் அம்மாவின் ஆசி பெற்று தேர்தலில் போட்டியிட்ட இவர் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் சிறப்பாக கழக பணி ஆற்றி வந்த அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கந்திலி ஒன்றியம் அதிமுக கழகத்தால் கட்சியின் நலன் கருதி இரண்டாக பிரித்து கந்திலி கிழக்கு ஒன்றிய செயலாளராக பதவி வழங்கினார் எடப்பாடியார். இந்த நிலையில் தொடர்ந்து கழக பணி ஆற்றி வந்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிகப்பட்ட தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்று 15.08.24 அன்று இரவு 9மணிக்கு அவர் உயிரிழந்தார் என தனியார் மருத்துவமனை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது சொந்த ஊரான காக்கங்கரை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடலுக்கு அரசியல் பிரமுகர்கள்,அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் இறுதி ஊர்வலம் மாலை மணிக்கு அவரது சொந்த தோட்டத்தில் உடல் நல்அடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.
Next Story