மாவட்ட ஆட்சியரிடம் சிவசேனா கட்சியினர் விநாயகர் வேடத்தில் ஊர்வலமாக வந்து நூதன முறையில் கோரிக்கை

கோரிக்கை
தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்படுகிறது இதற்காக விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வளத்திற்கு அனுமதி கோரி தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் நூதன முறையில் அனுமதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் சார்பில் அடுத்த மாதம் 180 இடங்களில் விநாயகர் வைத்து வழிபட உள்ளதாகவும் மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் மூன்றாவது மேலும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் மூன்றாவது நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் தேனி பொம்மையகவுண்டன்பட்டியில் இருந்து அரண்மனைபுதூர் வரை ஊர்வலமாக எடுத்துச் சென்று பெரியாற்றில் கரைக்கப்படுவதற்கு அனுமதி வேண்டி தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர் இதற்காக சுமார் 30க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியினர் மற்றும் விநாயகர் வேடம் அணிந்த நபருடன் ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாக நடந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை அளித்தனர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு நூதன முறையில் அனுமதி வேண்டி கோரிக்கை வைத்த சம்பவம் அனைவராலும் கவனிக்கப்பட்டது
Next Story