திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரைக்குபொதுமக்கள் உற்சாக வரவேற்பு
Tirupathur King 24x7 |16 Aug 2024 7:22 AM GMT
திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுறைக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்பு
திருப்பத்தூர் மாவட்டம் இந்தியா அளவில் தமிழ் நாடு அதிமுக ஆட்சியில் 18 வாது இடத்தில் வளர்ச்சியில் பின்தங்கி இருந்த இடத்தை திமுக ஆட்சியில் 3 வாது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது என்று எம்பி பேச்சு! திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரைக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாடப்பள்ளி, கிருஷ்ணாபுரம், கோயிலூர், காக்கனம்பாளையம், அகரம், செலந்தம்பள்ளி,உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக, வாக்களித்து வெற்றி பெற செய்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி. என். அண்ணாதுரை 2. லட்சத்து 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க வரும்பொழுது பெண்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மாலை அணிவித்து மலர் கிரிக்கிடம் அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் அப்போது சி.என்.அண்ணாதுரை பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர் அதுமட்டுமின்றி இந்தியா அளவில் தமிழ்நாடு மிகவும் வளர்ச்சியில் பின்தங்கி 18 வாது இடத்தில் வகித்து இருந்தது கடந்த மூன்று ஆண்டு காலத்தில் திமுக பொற்கால ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை வசதி குடிநீர் வசதி. உள்ளிட்ட பல்வேறு எண்ணற்ற வசதிகள் செய்து இன்று தமிழ்நாடு 3 வாது இடத்தில் வளர்ச்சி அடைந்து உள்ளது எங்கள் ஆட்சியில் சொல்வதெல்லாம் செய்வோம் சொல்லாததும் செய்வோம் என்று ஆரவாரத்துடன் பேசினார் பின்னர் மாடப்பள்ளி பகுதியில் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வீர வணக்கம் செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்
Next Story