"என் உயிரினும் மேலான" கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது.

"என் உயிரினும் மேலான" கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது.
"என் உயிரினும் மேலான" கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப்போட்டி ஆலோசனை கூட்டம் கரூரில் நடைபெற்றது. நாளை ஆகஸ்ட் 17-ல் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டின் பேரில் திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக இன்று மாவட்ட இளைஞரணி செயலாளரும் மாநகராட்சி மண்டல தலைவருமான சக்திவேல் தலைமையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்த்தி ஹோட்டல் அழகம்மை மகாலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாளை நடைபெற உள்ள பேச்சு போட்டியில் என்றென்றும் பெரியார் ஏன், அண்ணா கண்ட மாநில சுயாட்சி, கலைஞரின் தொலைநோக்கு பார்வை, மானமிகு சுயமரியாதைக்காரர்- கலைஞர்,நவீன தமிழ்நாட்டின் சிற்பி, ஹிந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம், சமூகநீதி காவலர் கலைஞர், தமிழ்நாட்டு குடும்பங்களில் திமுக, பேசி வென்ற இயக்கம், திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு க ஸ்டாலின் போன்ற தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெறும் நபருக்கு முதல் பரிசு ஒரு லட்சமும், இரண்டாம் பரிசு 75,000, மூன்றாம் பரிசு 50,000 வழங்கப்பட உள்ளது. போட்டியின் நடுவர்களாக கம்பம் செல்வேந்திரன், குத்தாலம் அன்பழகன், செந்தில் வேல், ஆண்டாள் பிரியதர்ஷினி, தாயகம் கவி, ஏ எஸ் வி பிரகதீஸ்வரன் ஆகியோ் நியமிக்கப்பட்டுள்ளனர். நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாநகர இளைஞரணி அமைப்பாளர் கராத்தே பூபதி, மாவட்ட துணை அமைப்பாளர் கனகராஜ், ராஜா ஆத்தூர் பாபு மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர்.
Next Story