தார் சாலை பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
Salem (west) King 24x7 |16 Aug 2024 9:35 AM GMT
சாலையின் தரம் குறித்து ஆய்வு
சேலம் நெடுஞ்சாலை உட்கோட்ட பராமரிப்பில் உள்ள திருச்செங்கோடு- அரியானூர் சாலை, வீரபாண்டி பஸ் நிறுத்தம் அருகில் குறுகிய வளைவு சாலை, பாலம்பட்டி சாலை சந்திப்பு, ஆட்டையாம்பட்டி- மசக்காளிப்பட்டி சாலையில் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள சென்னகிரி சாலை சந்திப்பு, சப்பையாபுரம் அருகில் ஆத்துப்பிள்ளையார் கோவில் குறுகிய வளைவு, செவ்வாய்ப்பேட்டை- இளம்பிள்ளை சாலையில் முருங்கப்பட்டி சந்திப்பு சாலை, நாகியம்பட்டி சாலை சந்திப்பு ஆகியன பகுதிகள் அதிக விபத்துக்கள் நடப்பதாக தேர்வு செய்து சாலை பாதுகாப்பு திட்டத்தில் மேம்பாடு செய்ய எடுத்துக் கொள்ளப்பட்டு பணி நிறைவு பெற்றுள்ளது. இந்த பணிகளை நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் பார்வையிட்டு சாலையின் தடிமன் மற்றும் தரத்தினை ஆய்வு செய்தார். மேலும் சாலைகளில் விபத்துக்களை குறைக்க உரிய வழிமுறைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி கோட்ட பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர்.
Next Story