அரிமா சங்கம் சார்பில் இரு வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்

அரிமா சங்கம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முன்னிட்டு இரு வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள்
செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம் சார்பில் 78-வது சுதந்திர தின விழா முன்னிட்டு இரு வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கத்தினர் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தில் நரிக்குறவர் வசிக்கும் இடத்தில் தேசியக்கொடி ஏற்றி அங்கு இருக்கும் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.. அதன் பிறகு அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து உத்தமநல்லூரில் அமைந்துள்ள மரியம்மாள் மாற்றுத்திறனாளி பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு சீருடை தைத்துக் கொள்ளும் செலவை அச்சிறுப்பாக்கம் நியூ மகாலட்சுமி உரிமையாளர் லயன் ஓம்பிரகாஷ் ஏற்றார். மேலும் சங்கத்தின் சார்பாக மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பயன்பெறும் வகையில் அவர்களுக்கு ரூ 15,000 மதிப்புள்ள ஆம்ப்ளிஃபையர் மற்றும் வயர்லெஸ் மைக் அன்பளிப்பாக வழங்கினர். அங்கு பயிலும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், பேனா,இனிப்புகள் வழங்கினர். இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் கோயில் நகர அரிமா சங்கம் தலைவர் லயன் துக்காராம்,செயலாளர் லயன் மின்னல்மூர்த்தி, பொருளாளர் லயன் அசோக்,மற்றும் வட்டார தலைவர் லயன் ரவிச்சந்திரன்,மாவட்ட நிர்வாகி லயன் கண்ணன், மாவட்ட தலைவர்கள் லயன் ஜெயராஜ், லயன் கதிரேசன், லயன் முருகன், மற்றும் அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story