கிராம சபை கூட்டத்தில் ஏற்பட திடீர் பரபரப்பு
Tiruchengode King 24x7 |16 Aug 2024 1:07 PM GMT
தார் சாலை அமைக்க கோரி அதிகாரியுடன் வாக்குவாதம் ஈடுபட்ட நபர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிராம சபை கூட்டமானது பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்றது . இந்த கூட்டத்திற்கு பஞ்சாயத்து தலைவர் வசந்தி வெங்கடாசலம் தலைமை தாங்கினார். இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து பேசுவதற்காக கூட்டத்தில் திரண்டிருந்தனர். அப்பொழுது பிள்ளையார் காட்டூர் என்ற பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவர் தான் வசிக்கும் வீட்டின் அருகே முறையான தார் சாலை வசதி இல்லாததால் ,அவதி அடைந்து வருவதாகவும் ,இதன் காரணமாகவும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும் தவிப்புக்கு உள்ளாகி வருவதாகவும், எனவே உரிய தார்சாலை அமைக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார் . அப்போது அங்கிருந்த அரசுத்துறை அதிகாரிகள் இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இருந்தபோதிலும் பத்தாண்டுகளுக்கு மேலாகவே தார் சாலை அமைக்கப்படாமல் உள்ளது .எனவே உடனடியாக தார் சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..இந்த கிராம சபை கூட்டத்தில் ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது.
Next Story