சிவகங்கை ஆடி பொங்கல் திருவிழா
Sivagangai King 24x7 |16 Aug 2024 3:46 PM GMT
சிவகங்கை மாவட்டம், அ.காளாப்பூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் மாலை வரை கோயில் முன் உள்ள திடலில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடனுக்காக ஆடு, கோழிகளை வெட்டி பலியிட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தார். அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.
Next Story