ரோட்டில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி

ரோட்டில் தேங்கும் மழை நீரால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் விளக்கு ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்பதால் வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்
சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் விலக்கு ரோட்டில் மழை நீர் தேங்கி நிற்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இளையான்குடி, தாயமங்கலம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. காளையார்கோயில் இளையான்குடி ரோட்டில் தாயமங்கலம் விலக்கில் மழை நீர் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் தெரியாமல் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிவரும் மழை காலங்களில் ரோட்டில் தண்ணீர் அதிகளவில் நிற்கும் சூழ்நிலையில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். மாவட்ட நிர்வாகம் தாயமங்கலம் விலக்கு ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரும் கோரிக்கையாக உள்ளது
Next Story