கரூரில் கொட்டி தீர்த்த கனமழை. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
Karur King 24x7 |16 Aug 2024 4:02 PM GMT
கரூரில் கொட்டி தீர்த்த கனமழை. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
கரூரில் கொட்டி தீர்த்த கனமழை. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு. தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நகர துவங்கியுள்ளதால், இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்தது. ஆனால், அதற்கு நேர் மாறாக கரூர் மாவட்டத்தில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்தது. ஆயினும், கடந்த சில தினங்களாக கரூர் மாவட்டத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பரவலாக அனைத்து பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று இரவு 8 மணி அளவில் லேசாக பெய்ய துவங்கிய மழை வழுத்து கனமழையாக பெய்தது. இதனால் கரூர் நகரப் பகுதிக்குள் பெரும்பாலும் மழை நீர் வெள்ளமாக சாலைகளில் ஓட துவங்கியது. கனமழையாக பெய்ததால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்வதற்கு அச்சப்பட்டு சாலை ஓரங்களில் தஞ்சம் அடைந்தனர். அதேசமயம் போக்குவரத்து வாகனங்களும் சாலையில் செல்ல முடியாமல் மெதுவாக சென்றது. பொதுமக்கள் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த சூழலில் பெய்த மழை அந்த வெப்ப இறுக்கத்தை மாற்றி குளிர்ந்த நிலையாக மாற்றியதால் மகிழ்ச்சி அடைந்தனர். இதே போல விவசாயிகள் பெய்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story