கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை!
Pudukkottai King 24x7 |17 Aug 2024 3:22 AM GMT
பக்தி
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஆடிமாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையொட்டி, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Next Story