கலைஞர் நூற்றாண்டு பேச்சுப்போட்டி சிறப்பாக நடைபெற்றது.
NAMAKKAL KING 24X7 B |17 Aug 2024 11:43 AM ISTகிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில், என் உயிரினும் மேலான.. என்னும் தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில், திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் K.R.N. இராஜேஷ்குமார், திமுக மேற்கு மாவட்ட செயலாளர் நகர அமைப்பு மண்டல திட்டக் குழு உறுப்பினர் S.M. மதுரா செந்தில் ஆகியோர் தலைமை வகித்தனர். கட்சியின் இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பி.எஸ்ப. சீனிவாசன் போட்டியின் மேலிடப் பார்வையாளராக பங்கேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் S.M. மதுரா செந்தில் பேசும்போது, இளம் பேச்சாளர்கள் பலரையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக இளைஞரணி இது போன்ற பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. இளைஞர்கள் அரசியலில் தங்கள் பங்களிப்பை அளிக்க வேண்டும். சமூக நீதி, நாட்டின் மக்களின் வளர்ச்சி, தொலைநோக்கு பார்வை சுயமரியாதை, திராவிட மாடல் ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் தாமும் அறிந்துகொண்டு அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும். அதற்கு இதுபோன்ற பேச்சுப்போட்டிகள் பெரிதும் துணை புரிகின்றன என்றார். தலைமை உரையாற்றி பேசிய, K.R.N. இராஜேஷ்குமார் கூறும்போது, இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும் வகையில் திமுக தொடர்ந்து கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. 10, 12-ம் வகுப்பு நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. திமுக ஆட்சியில் கலைஞர் ஆற்றிய திட்டங்கள் மூலம் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்தது. 1989 ஆண்டு கலைஞர் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கலை, மருத்துவம், பொறியியல் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். 30 ஆண்டு காலமாக இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. பள்ளி மாணவ மாணவிகளுக்கு 1989 இலவச பேருந்து பயணம் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டை வழங்கினார். அவர் வழியில் ஆட்சி முதல்வர் ஸ்டாலின் , அரசு பள்ளிகளில் படித்துவிட்டு, உயர் கல்விக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் ஆகிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, மாதம் 1000/- வழங்கப்படுகிறது. கல்வியின் தேவையை பூர்த்தி செய்ய முதல்வர் , தொழிற்கல்வியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு, நுழைவு தேர்வு ரத்து செய்து, தொழில் கல்விக்கு செல்ல கலைஞர் ஆணையை வெளியிட்டார். கலைஞரின் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில், இந்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சர் இராஜ்நாத் சிங், நாளை கலைஞர் நாணயம் வெளியிடுவது, நூற்றாண்டு விழாவுக்கு பெருமை சேர்க்கும். பேச்சு போட்டி மாணவர்கள் சிறப்பாக பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மாவட்ட அளவில் சிறந்த முறையில் தேர்ச்சி பெறுவோர் மாநில போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநில அளவில் முதல் 3 இடங்கள் பெறுவோருக்கு ஆகிய பரிசுகள் அளிக்கப்படும் என்றும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் K.R.N. இராஜேஷ்குமார் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பேச்சு போட்டியின் தலைப்புகளாக, 1)என்றென்றும் பெரியார். ஏன்? 2) அண்ணா கண்ட மாநில சுயாட்சி. 3) கலைஞரின் தொலைநோக்கு பார்வை 4) மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் 5) கலைஞர் நவீன தமிழ்நாட்டின் சிற்பி, 6) இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம். 7) சமூக நீதி காவலர் கலைஞர் 8) தமிழ்நாட்டு குடும்பங்களில் திமுக., 9) பேசி வென்ற இயக்கம்., 10) திராவிட மாடல் நாயகர் முதல்வர் மு க ஸ்டாலின். ஆகிய பத்து தலைப்புகளில் பேச்சு போட்டி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாநகராட்சி மேயர் து. கலாநிதி, துணை மேயர் செ. பூபதி, திமுக சட்டமன்ற உறுப்பினர் கு. பொன்னுசாமி, மாநில-மாவட்ட- ஒன்றிய-பேரூர்-நகர- சார்பு அணியினர், கல்லூரி மாணவ- மாணவிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story







