சேலத்தில் அரசு டாக்டர்கள் போராட்டம்
Salem (west) King 24x7 |17 Aug 2024 8:43 AM GMT
இதனால் நோயாளிகள் அவதி
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என வலியுறுத்தி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள் இன்று காலை ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் நோயாளிகள் பெரும் அவதி அடைந்தனர்.
Next Story