தனியார் நிறுவன மேற்பார்வையாளரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு

தனியார் நிறுவன மேற்பார்வையாளரை கத்தியால் தாக்கி பணம் பறிப்பு
போலீசார் விசாரணை
பீகார் மாநிலம் பாட்டியா மாவட்ட சேர்ந்தவர் அபித் ஆலம் (வயது 31). இவர் கரூரில் ஏற்றுமதி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். வேலை தொடர்பாக பெங்களூரூ செல்வதற்காக நேற்று முன்தினம் சேலம் வந்தார். ஏ.வி.ஆர். ரவுண்டானா அருகில் நின்ற போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி ஆபித் ஆலத்திடம் பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே ஆத்திரம் அடைந்த அவர்கள் கத்தியால் தாக்கி விட்டு அவரிடம் இருந்து ரூ.1,500-ஐ பறித்து விட்டு தப்பி சென்றனர். காயம் அடைந்த ஆபித் ஆலம் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
Next Story