அதிமுகவில் ஐந்து மத்திய அமைச்சர்கள் ஆவதை தடுத்தது எடப்பாடி தான்

அதிமுகவில் ஐந்து மத்திய அமைச்சர்கள் ஆவதை தடுத்தது எடப்பாடி தான்
எடப்பாடி பழனிச்சாமி மட்டும் சரியான முடிவு எடுத்திருந்தால் அதிமுகவில் ஐந்து மத்திய அமைச்சராக இப்போது இருந்திருப்பார்கள் இதைக் கெடுத்து குட்டுச்சுவர் ஆக்கியது எடப்பாடி தான் என 
கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில் நடைபெற்ற பாஜக பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் பேசினார். சேலம் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாவட்டத் தலைவர் சுதீர் முருகன் தலைமையில் நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக வாய்ப்பளித்த வாக்காளர்கள் நன்றியை தெரிவித்தும் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் பஸ் நிலையத்தில் ஆகஸ்ட் 16 இரவு 9 மணி அளவில் நடைபெற்றது இந்த பொதுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக வழக்கறிஞர் தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அதில் எடப்பாடி மட்டும் சரியான முடிவு எடுத்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் நமது டெல்லியில் தமிழன் கொடிகட்டி பறந்திருப்பான் அதில் 10 மந்திரி சபை அதில் அதிமுக ஐந்தில் மத்திய இணை அமைச்சர்களாக  கொடி கட்டி பறந்து இருப்பார்கள் என பேசினார் தமிழகத்தில் உள்ள டாஸ்மார்க் கடையில் முதலமைச்சர் வரை கட்டிங் போகிறது ஆக அனைத்து ஊழல்களிலும் முதலமைச்சர் வரை பங்கு இருக்கிறது எனவும், 52 கோடி பேருக்கு பேங்கில் அக்கவுண்ட் ஓபன் செய்தது பாஜக அரசு தான், அதேபோன்று ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் விபத்து காப்பீடு திட்டத்தில் 5 லட்சம் ரூபாய் வழங்கிய அரசு மோடி தான் எனவும்,நாடாளுமன்ற தேர்தலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் வாக்குகள் அளித்த வாக்காளர்களுக்கு நன்றி நன்றி நன்றி என பேசினார். இந்த பொதுக் கூட்டத்தில் கொங்கணாபுரம் தெற்கு ஒன்றிய தலைவர் வெங்கடேசன் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கலைச்செல்வன் ஹரி ராமன் மாவட்டத் துணைத் தலைவர் பாலமுருகன் மற்றும் மாநில,மாவட்ட, அணி பிரிவு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story